Sunday, February 9, 2020

A. P. J. Abdul Kalam

தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்து இன்று கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர், இந்திய விஞ்ஞான ஆய்வில் இந்தியர்களின் நிலையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் அப்படிப்பட்ட ஒரு ஒப்பற்ற மனிதரான டாக்டர் APJ அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றினை இந்த பதிவில் காணலாம் வாருங்கள். இந்திய தேசத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இவர் வலம்வந்துள்ளார்.

இளைஞர்களே எதிர்கால இந்தியாவினை மாற்றுவார்கள் என்று கூறி அதுமட்டுமின்றி நான் என்னால் முடிந்த உயரத்தினை பார்த்துவிட்டேன். ஆனால் நீங்கள் என்னை விட உயரத்தை பார்ப்பீர்கள் அதற்காக கனவு காணுங்கள் என்று சொல்லி அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திழந்தவர் கலாம் . சாகும் வரை திருமணம் செய்யாமல் நாட்டிற்காக உழைத்த ஒப்பற்ற மனிதர். இந்திய ஏவுகணை நாயகனின் வாழ்க்கை வரலாறு இதோ.!

அப்துல் கலாம் அவர்கள் தமிழகத்தின் எல்லலையான ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா என்கிற தமபதிக்கு மகனாக பிறந்தார். இவருடைய தந்தை மீனவதொழிலினை அடிப்படையாக கொண்டவர். எனவே தனது தந்தையின் பாரத்தினை குறைக்க செய்தித்தாள் போடுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்து தனது குடும்பத்திற்கு அவரது பங்களிப்பை தந்தார்.

அப்துல்கலாம் கல்வி மற்றும் படிப்பு :
அப்துல்கலாம் அவர்கள் தந்தை சாதாரண குடும்பத்தை சார்ந்தவர் என்பதனால் அவரை ராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். அவரது பள்ளிப்படிப்பு காலத்தில் கலாம் ஒரு சராசரி மாணவராகவே திகழ்ந்தார். ஆனால், இவரிடம் ஒரு திறமை இருந்தது அது என்னவென்றால் மதிப்பெண் மீது நம்பிக்கை இல்லாத இவர் நடைமுறையில் தான் கற்றவற்றை சிந்தித்து பயன்படுத்தும் புத்தி வாய்ந்தவர். இந்த யோசனை திறனே இவரை பிற்காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற்றியது.

தனது பள்ளிப்படிப்பினை முடித்த இவர் கல்லூரி படிப்பிறகாக திருச்சியில் வந்து இயற்பியல் துறையில் சேர்ந்தார். ஆனால் அவர் அதனை படிக்கும்போதே இந்த துறை நமக்கு சரிவராது.விண்வெளி அறிவியலை பற்றியே எந்நேரமும் நினைத்துக்கொண்டிருந்த அவர் இயற்பியல் துறையில்அவரது இளங்கலை பட்டத்தினை 1954ஆம் ஆண்டு பெற்றார் .

அதன் பின் பிடிக்காத துறையில் பணியாற்றுவதை விட பிடித்த துறையில் மீண்டும் படிக்கலாம் என்று நினைத்த கலாம் சென்னையில் 1955ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் படிப்பில் சேர்ந்தார். பிறகு அந்த பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பிறகே அவரது விண்வெளி தொடர்பான ஆய்வு பணியில் சேர்ந்தார். அதுகுறித்து கீழே காணலாம்.

விஞ்ஞானி அப்துல்கலாம் :
தனது பொறியியல் படிப்பினை முடித்த இவர் முதலில் 1960ஆம் ஆண்டு புது டெல்லியினை தலைமையிடமாக கொண்ட DRDO [DRDO – Defence Research Development Organisation] என்ற வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் சேர்ந்து பணியாற்ற துவங்கினார். இந்த நிலையில் இவர் இந்திய ராணுவத்திற்காக ஒரு சோதனை ஹெலிகாப்டரினை தயார் செய்து கொடுத்தார். அது பலரிடமும் கலாம் அவர்களுக்கு பாராட்டுகளை வாங்கிக்குடுத்தது.

பிறகு தனது உழைப்பு மற்றும் திறமை காரணமாக அவர் 1969ஆம் ஆண்டு [ISRO- Indian Space Research Organisation] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்தார். அவர் இங்கு செயற்கைகோள்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை வடிவமைக்க பிரிவில் சேர்ந்தார்.

SLV – III ஏவுகணை :
இவர் தனது சிறப்பான பணி ஈடுபாட்டின் காரணமாக ISROவில் [SLV -III ] என்ற செயற்கைகோளினை விண்ணிற்கு ஏவும் ஒரு ராக்கெட்டினை வடிவமைக்கும் குழுவிற்கு தலைவரானார். இந்த ராக்கெட்டினை வடிவமைக்கும் காலமே கலாமின் வாழ்வில் பிடித்த நாட்கள் என்று அவரே தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு விண்வெளி குறித்த ஆய்வினை அவர் விரும்பி செய்துள்ளார்.

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட SLV -III :
இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட தயாராக இருந்த போது ஒட்டு மொத்த உலகின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியது என்று கூறினால் அது மிகையாகாது. SLV  III ஏவுகணை “ரோகினி” என்ற செயற்கைகோளினை தாங்கி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. மேலும் அது வரையறுக்கப்பட்ட பாதையில் வெற்றிகமாக சென்று இலக்கினை அடைந்தது.

இந்த வெற்றி இந்தியாவை மற்ற நாடுகளின் பார்வை படும் அளவிற்கு திருப்பியது. அந்த அளவிற்கு உலகம் கண்ட ஒரு முற்போக்கு சாதனையினை நிகழ்த்திக்காட்டினார் கலாம்.

பொக்ரான் அணுஆயுத சோதனை :
உலகில் சில பணக்கார நாடுகள் மட்டுமே தங்களது நாட்டினை காப்பாற்ற அணு ஆயுதங்களை தயார் செய்து கொள்ளும் . ஆனால் அதனை தகர்த்து இந்தியாவும் அதனை செய்யும் என்று நிரூபித்து காட்டினார் கலாம் . ஆம் 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது சர்வதேச நாடுகளின் அச்சுறுத்தலினை மீறி இவர்கள் இணைந்து இந்த அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி இந்தியாவின் வலிமையினை உலகிற்கு நிரூபித்தனர்.

குடியரசுத்தலைவர் கலாம் :
2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு தனது குடியரசுத்தலைவர் பதவியினை அவர் பெற்றார். அதிலிருந்து 2007 வரை 5 ஆண்டுகள் அவர் குடியரசுத்தலைவராக சிறப்பாக பணியாற்றினார். தான் ஒரு விஞ்ஞானி மட்டுமில்லை சிறந்த தலைமைப்பண்பு கொண்டவர் என்பதனையும் அவரது பதவிக்காலத்தில் அவர் நிரூபித்தார்.

குடியரசு மாளிகைக்கு மாணவர்களை வரவழைத்து அவர்களை சந்தித்து உரையாடும் பழக்கத்தினை வைத்திருந்த அவர் ஒருமுறை பார்வை இழந்த மாணவரை சந்தித்து உரையாடினார். அந்த அளவிற்கு மாணவர்களுடன் உரையாடுவது அவருக்கு பிடித்த ஒன்று.

அப்துல் கலாம் இறப்பு :
பொதுவாக நம்முடைய இறப்பு வரும்போது நாம் நமக்கு பிடித்த விஷயத்தினை செய்துகொண்டிருக்கும்போது இறக்கலாம் என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் கலாமுக்கு அவருக்கு பிடித்த விஷயத்தினை செய்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்தார்.

ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினாராக சென்ற கலாம். அந்த கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். அதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்தார். அவரது மறைவு இந்தியா முழுவதினையும் சோகமாக்கியது நாம் அறிந்ததே. அதோடு அவர் மறைந்த அன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

அவர் பெற்ற விருதுகள் :
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா

அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

தமிழகத்தில் கலாமின் நினைவிடம் :
அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகிலே பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் வாயில் “இந்தியாகேட்” போன்று அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கட்டிடமானது “ராஷ்டிர பவன்” போன்று வடிவமைக்க பட்டிருக்கும். அந்த நினைவிடத்தில் அவரது பல புகைப்படங்கள், அவற்றினை பற்றிய குறிப்புக்கள் மற்றும் அவருடைய வீணை வைத்த சிலை அமைப்பட்டிருக்கிறது.

மேலும் கலாம் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு மக்களின் பார்வைக்காக கலாம் இல்லம் எனும் பெயரில் காட்சியமாக மாறியுள்ளது. இதனை இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.

1 comment: